ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடிய விஜய்
ADDED : 343 days ago
நடிகர் விஜய் தற்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். அரசியல் குறித்த பணிகளிலும் தீவிரமடைந்து வருகிறார். இதற்காக சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அடிக்கடி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமிப்பது போன்ற பணிகளிலும் அவர் படு தீவிரம் அடைந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று சென்னை பரங்கி மலையில் உள்ள ராணுவ அதிகாரிகளின் பயிற்சி பள்ளிக்கு சென்று கலந்துரையாடி இருக்கிறார் விஜய். அப்போது ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரும் அவரை சந்தித்துள்ளார்கள். இப்படி ராணுவ வீரர்களுடன் விஜய் சந்திப்பு நடத்திய புகைப்படம், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.