உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நேருக்கு நேர் மோதும் அஜித், சிவகார்த்திகேயன் படங்கள்

நேருக்கு நேர் மோதும் அஜித், சிவகார்த்திகேயன் படங்கள்

மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை முதலில் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்தனர். அதன்பிறகு ஒரு சில காரணங்களால் இப்படம் 2025ம் ஆண்டு மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஐம்வல், பிஜூ மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை அடுத்த வருடம் மே 1ந் தேதி அன்றே ரிலீஸிற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !