ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்
ADDED : 337 days ago
கன்னட படங்களான சப்த சகரட்ச்சி எலோ படங்களில் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். தற்போது கன்னடத்தில் சிவராஜ் குமாரின் 'பைரத்தி ரணங்கள்' படத்தில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' , சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஒரு பிரமாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.