சித்தார்த்தின் 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியானது!
ADDED : 377 days ago
சித்தா, இந்தியன்-2 படங்களை அடுத்து சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மிஸ் யூ'. காதல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்க, கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜீவா நடித்த 'களத்தில் சந்திப்போம்' என்ற படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கியிருக்கிறார். வருகிற 29ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.