பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தில் இணைந்த ஜார்ஜ் மரியன், இந்துமதி மணிகண்டன்!
ADDED : 328 days ago
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் ஜோடி சேர்ந்துள்ளார்கள். அதோடு இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன், மிஷ்கின் இந்த 'டிராகன்' படத்தில் இணைந்திருப்பதாக நேற்று இப்படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இன்று ஜார்ஜ் மரியன் மற்றும் மெய்யழகன் படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன் ஆகியோரும் டிராகன் படத்தில் இணைந்திருப்பதாக ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார்கள். மேலும் இந்த படத்திற்கு லியோ ஜேம்ஸ் என்பவர் இசையமைக்கிறார்.