குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் சமந்தா!
ADDED : 410 days ago
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்த சமந்தா, தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு 'மயோசிட்டிஸ்' என்ற நோய்க்கான சிகிச்சையிலும் ஈடுபட்டு வருபவர், தற்போது 'சிட்டாடல்' வெப் தொடரில் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கூறும்போது, அம்மாவாக வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, ஒரு பெண் தாயாவது ஒரு அழகான அனுபவம். அதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். பெரும்பாலான பெண்கள் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். என்னை பொறுத்தவரை குழந்தை பெற்றெடுக்க வயது ஒரு தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண் தாயாகலாம் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.