பெரிய ப்ராஜெக்டில் கமிட்டான அர்ச்சனா!
ADDED : 329 days ago
ராஜா ராணி-2 தொடரில் வில்லியாக நடித்து கலக்கிய அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அதன்பின் வெப் சீரிஸ்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் டிமாண்டி காலனி-2 படத்தில் நடித்தது அவருக்கு நல்லதொரு சினிமா அறிமுகமாக அமைந்தது. இதனைதொடர்ந்து முழுக்கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பிய அர்ச்சனா தற்போது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கான அக்ரிமெண்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா தனது மகிழ்ச்சியினை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.