கண்கலங்கி விடைபெற்ற சுந்தரி குழுவினர்!
ADDED : 329 days ago
தமிழில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்றான 'சுந்தரி' தொடர், கேப்ரில்லா செல்லஸ், ஜிஸ்னு மேனன், கிருஷ்ணா, ஸ்ரீகோபிகா இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இரண்டு சீசன்களாக ஒளிபரப்பானது.
இந்நிலையில் இந்த தொடரானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சுந்தரிக்கு திருமணம் ஆகும் காட்சிகளுடன் இந்த தொடருக்கு க்ளைமாக்ஸ் எழுதியுள்ளனர். இதனையடுத்து கடைசி நாள் படப்பிடிப்பில் சுந்தரி தொடரில் நடித்த குழந்தை நட்சத்திரம் முதல் பெரியவர்கள் வரை எமோஷ்னலாகி கண்கலங்கி உள்ளனர். அதன் வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாக ரசிகர்களும் கூட சுந்தரியை மிகவும் மிஸ் செய்வோம் என சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.