குட் நியூஸ் சொன்ன கேப்ரில்லா!
ADDED : 322 days ago
சுந்தரி தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ். இவருக்கு கடந்த 2022ம் ஆண்டிலேயே திருமணம் முடிந்துவிட்டது. தற்போது இவர் நடித்து வந்த சுந்தரி சீசன் 2 முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். கடைசிநாள் சுந்தரி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கர்ப்பமான வயிறுடன் கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.