பார்க்கிங் பட இயக்குனர் உடன் இணையும் விக்ரம்!
ADDED : 326 days ago
கடந்தாண்டில் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் நடித்து வெளிவந்த படம் ' பார்க்கிங்'. இதன் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். சாதாரண பார்க்கிங் பிரச்னையை ஒரு சுவாரஸ்யமான கதையாக கொடுத்திருந்தார் இயக்குனர். இந்த படம் வரவேற்பையும், வசூல் ரீதியாக வெற்றியையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவர் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்தனர்.
இது அல்லாமல் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் பரவிய நிலையில் தற்போது நடிகர் விக்ரமை சமீபத்தில் சந்தித்து புதிய படத்திற்கான கதையை ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்னதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.