உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் மகனுக்கு இனிப்பு சுத்தமா பிடிக்காது - சிவகார்த்திகேயன்

என் மகனுக்கு இனிப்பு சுத்தமா பிடிக்காது - சிவகார்த்திகேயன்


சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் படம் 300 கோடி வசூலித்து தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ், பவன் தாஸ் என்ற இரண்டு மகன்களும் உள்ளார்கள்.

இவர்களில் முதல் மகன் குகன்தாஸ் குறித்து ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறும்போது, ''என் மகனுக்கு இனிப்பு பொருட்கள் சுத்தமாக பிடிக்காது. ஒரு முறை ஐஸ்கிரீம் ஊட்டி விட்டபோது அழுதுவிட்டான். இன்னும் சொல்லப்போனால் பிறந்த நாளில் கேக் வெட்டும் போது கூட அவன் இனிப்பு சாப்பிடுவதில்லை. அதே சமயம் காரமான உணவு என்றால் விரும்பி சாப்பிடுவான். அதனால் என் மகனுக்கு பிடித்தமான கார உணவுகளைதான் வாங்கிக் கொடுத்து வருகிறேன்,'' என்கிறார் சிவகார்த்திகேயன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !