குபேரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ!
ADDED : 370 days ago
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவரது 51வது படமாக 'குபேரா' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது இப்படத்தை 2025ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி மகா சிவராத்திரி வாரத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.