ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து
இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டேவும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கோல்கட்டாவை சேர்ந்தவர் மோகினி டே, 28. கிடார் கலைஞரான இவர், 10 வயது முதல் கிடார் வாசித்து வருகிறார். இவர் ஜாகிர் உசேன், கியுன்ஸி ஜோன்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்களுடன், இணைந்து பணியாற்றி உள்ளார். இசையமைப்பார், ஆல்பம் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டவர். பல ஆண்டுகளாக ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வருகிறார். ரஹ்மானுக்கு பிடித்த இசை கலைஞர்களில் இவரும் ஒருவர்.
அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'நானும், மார்க்கும், பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். இது பரஸ்பரம் இருவரும் விரும்பி எடுத்த முடிவு. நாங்கள் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும், தொழில் முறையிலான உறவு நீடிக்கும். நண்பர்களாக இருப்போம். எங்களது இசைப் பயணத்தை இது பாதிக்காது' என, தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கோச்சடையான் படத்தில், மோகினி டே இணைந்து பணியாற்றி உள்ளார். அடுத்தடுத்த இந்த விவாகரத்துகளால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து விமர்சனங்களும் புதிய புதிய கதைகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.