ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ்
ADDED : 316 days ago
தெலுங்கில் ரவி தேஜாவின் மிஸ்டர் பச்சான் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். இதைத்தொடர்ந்து இவர் அடுத்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது அல்லாமல் தெலுங்கில் சில முன்னனி நடிகர்களின் படத்தில் இவர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி பட இயக்குனர் மகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகும் ராம் பொதினேனியின் 22வது படத்தில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்ததாக அறிவித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்று நவ. 21ல் இப்படத்தினை பூஜை நடந்தது.