தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்!
ADDED : 284 days ago
யூடியூப்பில் ஆஹா கல்யாணம் எனும் வெப் தொடரில் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகை ப்ரிகிடா சகா. இவர் அதன் பிறகு பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இரவின் நிழல், கருடன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
தற்போது தனுஷ் இயக்கி நடித்து வரும் 'இட்லி கடை' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ப்ரிகிடா சகா. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.