உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்!

விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்!


தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், கடந்த மாதம் 27ம் தேதி விக்ரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் விக்ரவாண்டியில் தான் மாநாடு நடத்துவதற்கு தங்களது விளைநிலங்களை கொடுத்து உதவிய அனைத்து விவசாயிகளையும் நேற்று சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய். அதோடு அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தும் உபசரித்து இருக்கிறார். மேலும், மாநாடு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகளையும் இந்த நிகழ்ச்சியின்போது அழைத்து உபசரித்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !