சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி
ADDED : 326 days ago
கடந்த ஜூன் மாதம் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வெளியான படம் மகாராஜா. இப்படத்தில் அவருடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நடராஜ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த மகாராஜா படத்தை சீன மொழியில் நவ.,29ல் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அந்த வகையில் இரண்டு நாட்களில் 2.15 கோடி ரூபாய் அளவிற்கு இந்த படத்திற்கான முன்பதிவு நடந்துள்ளதாம். அதோடு போகப்போக இன்னும் பெரிய அளவில் இந்த படம் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.