முதல்முறையாக ரீ ரிலீஸ் ஆகும் குணா!
ADDED : 310 days ago
கடந்த 1991ம் ஆண்டில் சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த படம் 'குணா'. அந்த காலகட்டத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் கமர்ஷியல் ஆக வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ' கண்மணி அன்போடு' பாடல் இன்று அளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிகப்படுகிறது.
காலம் கடந்த பின்னர் குணா படத்தை ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். இதற்கு சான்றாக சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படமே சான்று. இந்த நிலையில் குணா திரைப்படம் கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக வருகின்ற நவம்பர் 29ம் தேதி அன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.