மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
309 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
309 days ago
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், தமிழை விட தெலுங்கில் தான் தேவி ஸ்ரீ பிரசாத் அதிகபடியான படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
தற்போது தெலுங்கில் முக்கிய படமான புஷ்பா 2ம் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வந்தார். ஆனால், இந்த படத்திற்கு பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை எனவும் தகவல்கள் பரவியது. இதைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' மற்றும் ராம் பொத்தினேனியின் 22வது படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பதாக அறிவித்தனர். ஆனால், இப்போது தயாரிப்பு நிறுவனத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் இப்படங்களை விட்டு தேவி ஸ்ரீ பிரசாத்தை நீக்கியதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
309 days ago
309 days ago