சிவகார்த்திகேயன், ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது?
ADDED : 354 days ago
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் அமரன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக திரையரங்குகளில் இன்னும் ஓடி வருகிறது. தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜனவரி 1, 2025ம் ஆண்டு புதிய வருடபிறப்பு அன்று வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.