மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி?
ADDED : 319 days ago
வாழை படத்திற்கு பின் இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' எனும் படத்தினை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோரின் படங்களை இயக்க ஏற்கனவே மாரி செல்வராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மாரி செல்வராஜ் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து புதிய படத்திற்கான கதை குறித்து பேசி வருவதாக தகவல் பரவி வருகிறது. விஜய் சேதுபதிக்கு கதை பிடித்துள்ளதால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என சொல்கிறார்கள்.