திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு
ADDED : 319 days ago
கங்குவா படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தில் நடித்து முடித்து விட்டார் சூர்யா. அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45 வது படத்தின் நடிக்க தொடங்கி இருக்கிறார் . முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா, ஜோதிகா ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதோடு அங்கு சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. அதையடுத்து ஜோதிகா மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.