உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி

சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி

நடிகர் சந்தானத்தை வைத்து டிக்கிலோனா, வடக்குபட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கார்த்திக் யோகி சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து புதிய படத்திற்கான பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளார் .தற்போது ஜெயம் ரவி இவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி கைவசம் அடுத்து இரண்டு மூன்று படங்கள் உள்ளன. அவைகளை முடித்த பின்னர் கார்த்திக் யோகி படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !