தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில்
ADDED : 329 days ago
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் பிரபலமான நடிகை தமன்னா, சமீபகாலமாக பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்தார். இந்தாண்டு தமிழில் வெற்றி வாகை சூடிய படங்களில் இதுவும் ஒன்று. அதன்பின் தமிழில் அவருக்கு வேறு படங்கள் இல்லை. ஹிந்தியில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெறுகின்றன. இதுபற்றி நடிகை தமன்னா கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்கள் அவற்றின் புவியியல், நிலப்பரப்பு சார்ந்து அதிகம் பேசுகின்றன. குறிப்பாக மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கதைகளை சொல்லுகின்றனர். அவர்கள் வெவ்வேறு வகையான மக்களுக்கு படத்தை தர எண்ணவில்லை. தங்களுக்கு தெரிந்ததை மட்டும் சொல்லுகிறார்கள். இதுதான் அவர்கள் கைகொடுக்கிறது'' என்றார்.