வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த்
ADDED : 319 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‛சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வெற்றி வசந்த். இவர் ‛பொன்னி' தொடரில் நடிக்கும் வைஷ்ணவியை காதலிப்பதாக அண்மையில் அறிவித்தார். இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணம் தொடர்பான நிகழ்வுகளான சங்கீத் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உற்றார் உறவினர்கள், சக நடிகர்கள் புடைசூழ கோலாகலமாய் நடந்தன. அதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்களும் வைரலாகின.
இந்த நிலையில் வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமணம் இன்று(நவ., 28) சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் தொடர்பான வீடியோவை இன்ஸ்டாவில் வெற்றி வெளியிட்டுள்ளார்.