‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் நீண்டகால தயாரிப்பாக உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசண்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துள்ளது.
அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்டில் இந்த டீசர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என டீசரில் அறிவித்துள்ளனர். டீசர் வெளியான 11 மணிநேரத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.