திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 312 days ago
தமிழில் தக்லைப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வரும் திரிஷா, தெலுங்கில் விஸ்வம்பரா, மலையாளத்தில் ராம், ஐடென்டிட்டி என அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் மலையாளத்தில் டொவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கும் ஐடென்டிட்டி படத்தின் டீசர் டிசம்பர் நான்காம் தேதி வெளியாகிறது. இந்த தகவலை டொவினோ தாமஸ் ஒரு போஸ்டர் உடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வருகிற ஜனவரி மாதத்தில் இந்த ஐடென்டிட்டி படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை அகில் பால், அனஸ் கான் ஆகியோர் இயக்கி உள்ளார்கள். மேலும் அஜித்துடன் த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகியுள்ளது.