உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை

சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை

கங்குவா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்கவில்லை. அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார்.

நேற்று பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா 45வது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்கியது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகை சுவாசிகா இணைந்து நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !