எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா
இமைக்கா நொடிகள், சர்தார், அரண்மனை 4 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹிந்தியில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை வைத்து வெளியான தி சபா்மதி ரிப்போா்ட் என்ற படம் வரவேற்பை பெற்றது. தீரஜ் சர்னா இயக்கிய இப்படத்தில் நடிகை ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்தார். ராஷி கண்ணா நாளை(நவ., 30) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛இந்த படத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நினைக்கவில்லை. பிரதமர், முதல்வர் ஆகியோரின் பாராட்டுகள் தன்னம்பிக்கையை தருகிறது. இது பிரச்சார படம் அல்ல. 4 ஆண்டுகளாக எனது பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். என் பிறந்தநாளை (நாளை) வாரணாசியில் கொண்டாடுகிறேன். எனக்கு ஆழமான கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. கடவுளை கொண்டாடுவது எனக்கு முக்கியம். 10 ஆண்டுகளாக இதை செய்கிறேன்'' என்றார்.