‛இட்லி கடை' படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் 20 வயது தனுஷ்
ADDED : 309 days ago
ராயன் படத்தை அடுத்து புதுமுகங்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். தற்போது குபேரா படத்தில் நடித்துக் கொண்டே இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கும் நிலையில் அருண் விஜய்யை வில்லனாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இந்த இட்லி கடை படத்தில் இரண்டு கெட்டப்புகளில் தனுஷ் நடிப்பதாகவும், அதில் ஒரு கெட்டப்பில் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் தனுஷ் 20 வயது இளைஞராக நடிப்பதாக தெரியவந்துள்ளது. அந்த இளமையான கெட்டப்பில் அவர் நடித்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.