உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது : 15 நாள் நீதிமன்ற காவல்

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது : 15 நாள் நீதிமன்ற காவல்

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான். தற்போது நகைச்சுவை கலந்த குணச்சித்ர வேடங்களில் நடிக்கிறார். இதுதவிர அரசியலிலும் அவ்வப்போது பயணிக்கிறார். இவரது மகன் துக்ளக் அலிகான், ‛கடமான் பாறை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதை மன்சூர் அலிகான் இயக்கி, தயாரித்தார்.

கடந்தவாரம் சென்னையில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் போனில் துக்ளக் அலிகானின் நம்பரும் இருந்தது. இதை வைத்து இவர்களுக்குள் என்ன தொடர்பு என துக்ளக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் துக்ளக் அலிகானையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னர் துக்ளக் உள்ளிட்ட கைதான நபர்களை அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் அஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி துக்ளக் அலிகான் உள்ளிட்ட 7 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !