உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்

இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்

நடிகர் சந்தானம் முதலில் விஜய் டிவியின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி உச்சத்தில் வலம் வந்தார். அதன் பிறகு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சந்தானம் முதல் முறையாக படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தானமே இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான கதை எழுதுவதற்கான பணியை தற்போது துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் இயக்குனர் டிகே இயக்கத்தில் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !