சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா
ADDED : 349 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சூர்யா அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்திலிருந்து கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்று த்ரிஷா இணைந்துள்ளார். சூர்யா மற்றும் த்ரிஷா காட்சிகள் கோவில் அரங்கம் அமைத்து உருவாக்கி வருகின்றனர் என்கிறார்கள்.