லெட்சுமி சீரியலை விட்டு விலகிய சஞ்சீவ்!
ADDED : 322 days ago
சின்னத்திரை நடிகரான சஞ்சீவ், 'லெட்சுமி' தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் 150 எபிசோடுகளுக்கு மேல் கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் நாயகனான சஞ்சீவ் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அவர் விலகியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவருக்கு பதிலாக இனி 'மகராசி' தொடரில் ஹீரோவாக நடித்த ஆர்யன் நடிக்க இருக்கிறார்.