4கே-வில் ரீ-ரிலீஸ் ஆகும் வேலையில்லா பட்டதாரி தெலுங்கு பதிப்பு
ADDED : 304 days ago
கடந்த 2014ம் ஆண்டில் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரகனி, சரண்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் ' வேலையில்லா பட்டதாரி' . இப்படம் தெலுங்கில் ரகுவரன் பி.டெக் என்கிற பெயரில் வெளியானது. தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது போல் தெலுங்கிலும் வெற்றி படமாக அமைந்தது.
வேலையில்லா பட்டதாரி படம் ஏற்கனே தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. தற்போது மீண்டும் ரகுவரன் பி.டெக் 4k தொழில்நுட்பத்தில் தெலுங்கு பதிப்பில் இந்தியாவில் சில திரையரங்குகளில் வருகின்ற ஜனவரி 4ந் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.