பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில்
ADDED : 340 days ago
மலையாள நடிகரான பஹத் பாசில் ஹீரோவை தாண்டி, வில்லன் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்ர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். மலையாள சினிமாவை கடந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிளிலும் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக பாலிவுட்டில் நாயகனாக களமிறங்க உள்ளார்.
இவரின் முதல் படத்தை 'ஹைவே', 'அமர் சிங் சம்கிலா' ஆகிய படங்களை இயக்கிய இம்தியாஸ் அலி இயக்கி, தயாரிக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக த்ரிப்தி டிம்ரி நடிக்கின்றார். 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.