கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன்
ADDED : 319 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி'. அனிரூத் இசையமைக்கும் இதன் படப்பிடிப்பு ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர் என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
தற்போது நடிகை ரெபா மோனிகா ஜான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூலி படத்தில் இணைந்து நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் பிகில், ஐருகண்டி, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான 'மாநகரம்' படத்தில் நாயகனாக நடித்த சந்தீப் கிஷனும் 'கூலி' படத்தில் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.