ஜாட் டீசர் வெளியீடு : ஆக்ஷனில் அசத்தும் சன்னி தியோல்
ADDED : 385 days ago
பாலிவுட் சினிமாவில் ஆக்ஷன் ஸ்டார் என பெயர் எடுத்தவர் நடிகர் சன்னி தியோல். ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ‛ஜாட்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்க, முதன்மை வேடத்தில் ரன்தீப் ஹூடா, வினீத் குமார் சிங், சயாமி கெர் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் சன்னி தியோலின் ஆக்ஷன் தான் முழுக்க முழுக்க இடம் பெற்றுள்ளது. சண்டை காட்சிகளை அனல் அரசு மற்றும் ராம் லக்ஷ்மண் ஆகியோர் வடிவமைத்துள்ளனர். டீசரை பார்க்கையில் சன்னி தியோல் மீண்டும் ஒருமுறை ஆக்ஷன் ஹீரோ என நிரூபித்துள்ளார். இந்தபடம் அடுத்தாண்டு ஏப்ரலில் திரைக்கு வருகிறது.