உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன்

சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன்


சின்னத்திரையிலிருந்து சென்று வெள்ளித்திரையில் கலக்கி வரும் வாணி போஜன், சோஷியல் மீடியா ட்ரோல்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் என பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவரது பேட்டியில், ''சமூக வலைதள ட்ரோல்களை விட சமூக வலைதளமே ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது. ஒரு படத்திலிருந்து தூக்கிவிட்டால் ஏன் உங்களை தூக்கிவிட்டார்கள் என துக்கம் விசாரிப்பது போல் கேட்பார்கள். வெளிநாடு சென்று போட்டோ போட்டால் படங்கள் இல்லை என்று சொல்வார்கள்.

நட்பு ரீதியில் நடிகருடன் படம் எடுத்தால் அதையும் ட்ரோல் செய்வார்கள். சில சமயம் முகத்தை கட் செய்துவிட்டு ஆபாசமாக பயன்படுத்துவார்கள். அதையும் மக்கள் நம்பிவிடுவார்கள். இந்த மாதிரியான ட்ரோல்களால் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !