உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்!

மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்!


விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் தொடர்களில் ஒன்று 'மோதலும் காதலும்'. இதில் ஹீரோவாக சமீரும், ஹீரோயினாக அஸ்வதியும் நடித்து வந்தனர். இந்த தொடரானது முன்னதாக விஜய் டிவியிலேயே ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்கிற தொடரின் ரீமேக் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்க தான் செய்தது. எனினும் நன்றாக சென்று கொண்டிருந்த இந்த தொடருக்கு சீக்கிரமே எண்ட் கார்டு போட்டுவிட்டனர்.

இதனையடுத்து சமீர் மீண்டும் விஜய் டிவியிலேயே 'பூங்காற்று திரும்புமா' என்கிற புதிய தொடரில் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார். சமீரின் கம்பேக் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !