ராஷ்மிகாவின் ‛தி கேர்ள் பிரண்ட்' டீசர் வெளியீடு
ADDED : 346 days ago
தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. கடந்தவாரம் அல்லு அர்ஜுன் உடன் இவர் இணைந்து நடித்து வெளியான ‛புஷ்பா 2' படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 4 நாட்களில் ரூ.824 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்திற்கு பின் ராஷ்மிகா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛தி கேர்ள் பிரண்ட்'. நடிகர், இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்கி உள்ளார். நாயகியை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. காதலுக்கும், நாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் இருக்கும் என டீசரை பார்க்கையில் புரிகிறது. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர்.