மெய்யழகன் பார்த்து கண்ணீர் விட்டேன் - அனுபம் கெர் நெகிழ்ச்சி
ADDED : 300 days ago
96 பட புகழ் பிரேம் குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்கு வெளியான படம் ‛மெய்யழகன்'. கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்தனர். ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்ற இந்த படம் லாபகரமாகவும் அமைந்தது. உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த படம் வெளியானது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த படத்தை இப்போது பார்த்து பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛மெய்யழகன் படம் பார்த்தேன். எளிமையான அழகான படம். நிறைய இடங்களில் அழுதேன். அரவிந்த்சாமி, கார்த்தி அருமையாக நடித்திருந்தனர். இயக்குனர் பிரேம் குமார் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளும், நன்றியும்...!'' என குறிப்பிட்டுள்ளார்.