மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
271 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
271 days ago
இப்போதெல்லாம் திரைப்படங்கள் சில பாகங்களாக வெளிவருது டிரண்டாகி உள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டாம் பாகம் முதலிலும், முதல் பாகம் பிறகும் வெளிவருவதும் அதிகரித்துள்ளது. 2022ல் வெளியான 'காந்தாரா' படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அதன் முன் பகுதி, 2வது பாகமாக தயாராகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளிவருகிறது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். விக்ரமுடன் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மளிகைக்கடை நடத்தி வரும் விக்ரம், பெண் குழந்தையை பாசமுடன் கவனித்துக் கொள்வது போல முதல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து துஷாரா விஜயனுடன் விக்ரம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெறுகிறது. அடுத்த ஒரு முக்கியமான சம்பவம் நடக்கிறது. அது போலீஸ் விசாரணையில் உள்ளது. விக்ரமுடன் போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா மோதுகிறார்.
இந்த டீசரின்படி கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தும் விக்ரமின் மகளுக்கு ஏதோ நிகழ்கிறது. அதற்காக விக்ரம் பழிவாங்குகிறார். அடுத்து வெளிவரும் முதல் பாகத்தில் விக்ரம், யார்? எங்கிருந்து அந்த ஊருக்கு வந்தார் என்பதாக இருக்கும் என தெரிகிறது.
271 days ago
271 days ago