மேலும் செய்திகள்
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
272 days ago
கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த்
272 days ago
வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம்
272 days ago
22வது சென்னை சர்வதேச திரைப்படவிழா வருகிற 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. இதில் சுமார் 65 நாடுகளில் இருந்து 160 படங்கள் வரை திரையிடப்படுகிறது. சிறந்த தமிழ் படங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவை இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு நடத்தினாலும், தமிழக அரசு ஆண்டுதோறும் இதற்கு நிதி வழங்கி வருகிறது.
இதுவரை 75 லட்சம் ரூபாய் வரை நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு 85 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளது. 85 லட்சத்திற்கான காசோலையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம்.சண்முகத்திடம் வழங்கினார். அப்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறையின் கூடுதல் இயக்குநர் அன்புச்சோழன், கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ்.செல்வராஜ், இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் தலைவர் சிவன் கண்ணன் மற்றும் துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
272 days ago
272 days ago
272 days ago