பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு 15 லட்சம் நிதி வழங்கிய கார்த்தி
                                ADDED :  325 days ago     
                            
                             
கடந்த வாரம் வீசிய பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல குடியிருப்புகளை சுற்றி இன்னமும் வெள்ளம் வடியாமல் இருக்கிறது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிர் இழந்தனர். மத்திய ஆய்வு குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு புயல் நிவாரண நிதி திரட்டி வருகிறது.
இந்த நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கினார். தற்போது நடிகர் கார்த்தி 15 லட்சம் ரூபாய் புயல் நிவாரண நிதியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.