ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு
ADDED : 312 days ago
மகாராஜா படத்தை அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கும் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஏஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க, திவ்யா பிள்ளை, ராஜ்குமார் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் நாயகியான ருக்மிணி வசந்துக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவர் தோன்றும் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்த படத்தில் அவர் ருக்கு என்ற கேரக்டரில் நடிப்பது தெரியவந்துள்ளது.