சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியின் புதிய பட பணிகள் துவங்கின
ADDED : 309 days ago
டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இந்த படத்திற்கு கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னகுமார் எழுதுகிறார். இந்த படத்தை இன்று(டிச., 14) பூஜை நிகழ்வுடன் தொடங்கியதாக அறிவித்துள்ளனர். இந்த பூஜை நிகழ்வில் படத்தின் கதாநாயகி டூடே ஜிவால், ரத்னகுமார், பிரதீப் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் எழில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேப்போல் அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஸ்ரீலீலா நாயகியாக தமிழில் அறிமுகமாக, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகளும் பூஜையுடன் இன்று(டிச., 14) துவங்கியது.