‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார்
ADDED : 309 days ago
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் முதன்முறையாக இணைந்து 'டூரிஸ்ட் பேமிலி' எனும் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கின்றார்.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் குடும்பத்தினர் இங்குள்ள வாழ்க்கைக்கு எப்படி தங்களை பொருத்திக் கொள்கிறார்கள் என்பதை இப்படம் கலகலப்பாக சொல்கிறது. இதில் யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது இதன் டப்பிங் பணிகளை சசிகுமார் துவங்கியதாக அறிவித்துள்ளனர்.