உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 45வது படத்தில் இணைந்த மேலும் ஒரு நாயகி!

சூர்யா 45வது படத்தில் இணைந்த மேலும் ஒரு நாயகி!


தற்போது ஆர். ஜே .பாலாஜி இயக்கி வரும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அதோடு லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகா இரண்டாவது நாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நட்டி நடராஜ், யோகி பாபு ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்தது. தற்போது இப்படத்தில் இன்னொரு நாயகியாக சிவதாவும் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். இவர் ஏற்கனவே அதே கண்கள், தீரா காதல், கருடன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் சூர்யா 45வது படத்தில் 3 ஹீரோயின்கள் இடம் பெற்றுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !