மோகன்பாபுவுக்கு டிசம்பர் 24 வரை அனுமதி
தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது இளைய மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக சொத்து விவகாரத்தில் தகராறு நடந்து வருகிறது. கடந்த வாரம் அவரது ஹைதராபாத் வீட்டில் டிவி நிருபர் ஒருவரை கடுமையாகத் தாக்கினார் மோகன்பாபு. அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு உடல்நலம் சரியில்லை என, நீதிமன்றத்தை அணுகி டிசம்பர் 24 வரை அனுமதி வாங்கியுள்ளார் மோகன்பாபு. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்த டிவி நிருபரை சந்தித்துப் பேசியுள்ளார் மோகன்பாபு.
இந்நிலையில் ரச்சகொன்டா போலீஸ் கமிஷனர் சுதீர் பாபு, நடிகர் மோகன்பாபுவுக்கு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 24ம் தேதி வரையில்தான் அவர் அனுமதி கேட்டுள்ளார். நீதிமன்றமும் அதை வழங்கியுள்ளது. அதற்குப் பிறகு அவர் ஒத்துழைக்க மறுத்தால் அவரைக் கைது செய்யவும் தயங்க மாட்டோம். சட்டப்படி அவர் ஒத்துழைக்க வேண்டும். விசாரணைக்கு வரும் போது மருத்துவச் சான்றிதழையும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.